கொல்கத்தா அணியை நிலைகுலைய வைத்த இம்ரான் தாஹீர்..முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

சென்னை அணிக்கெதிரான போட்டியில் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

ஐபிஎல் தொடரின் இன்றைய 29-வது லீக் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் விளையாடி வருகின்றன.

இதில் நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச தீர்மானித்ததால், அதன் படி கொல்கத்தா அணிக்கு துவக்க வீரர்களாக லின் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர்.

இதில் நரைன் 2 ஓட்டங்களில் வெளியேறே, அடுத்து வந்த வீரர்கள் ரானா 21, உத்தப்பா 0, தினேஷ் கார்த்திக் 18 என பெளலியன் திரும்பினாலும், தனி ஒருவனாக லின் சென்னை அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்து வந்தார்.

அரைசதம் அடித்து 82 ஓட்டங்கள் எடுத்த நிலையில், அவுட்டாக கொல்கத்தா அணி இறுதியாக 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்கள் எடுத்தது.

சென்னை அணி சார்பில் இம்ரான் தாஹீர் கொல்கத்தா அணியின் முக்கிய விக்கெட்டுகளான கிறிஸ் லின், நிதிஷ் ராணா, ராபின் உத்தப்பா, ஆண்ட்ரூ ரசுல் ஆகிய நான்கு பேரின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்