தமிழ் ரசிகர்களை ஏமாற்றிய டோனி..ஏன் சொல்லவில்லை என குமுறல்! வைரலாகும் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று சென்னை அணி வீரர்கள் தமிழில் புத்தாண்டு வாழ்த்து சொன்ன வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

இன்று உலகத்தமிழர்கள் கொண்டாடும் தமிழ் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஐபிஎல் தொடரில் மிரட்டி வரும் சென்னை அணி வீரர்கள் தமிழில் புத்தாண்டு வாழ்த்து சொல்லியுள்ளனர்.

அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதில் சின்ன தளபதி ரெய்னா தமிழில் சின்ன தளபதி எனவும், பிராவே சாம்பியன் எனவும், வாட்சன் மற்றும் இம்ரான் தாஹீர் போன்றோர் தமிழிலே அவர்களின் பெயரை எழுதி வாழ்த்து கூறியுள்ளனர்.

இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டோனி வாழ்த்து கூறவில்லை, இதனால் இந்த வீடியோவைக் கண்ட இணையவாசிகள் டோனி எங்கே என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்