ஐபிஎல் போட்டிகளில் இந்திய வீரர்கள் கோடிக்கணக்கில் புரள சச்சின்-டிராவிட் காரணம்! சேவாக் அதிரடி பேட்டி

Report Print Santhan in கிரிக்கெட்

ஐபிஎல் போட்டியில் வீரர்கள் கோடிக்கணக்கில் ஊதியம் பெறுவதற்கு சச்சின், கும்ப்ளே, திராவிட் நடத்திய போராட்டம்தான் காரணம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கூறியுள்ளார்.

இந்தியாவில் எந்த அளவிலும் இல்லாத அளவிற்கு கிரிக்கெட்டில் வீரர்களுக்கு அதிக அளவு சலுகைகள், சம்பளம் போன்றவை கொடுக்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி இந்தியாவில் கிரிக்கெட்டிற்கே அதிக ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக், இந்திய அணியிலும் சரி, ஐபிஎல் போட்டிகளிலும் சரி வீரர்களுக்கு நல்ல ஊதியம் கிடைத்து வருகிறது. 17 ஆண்டுகளுக்கு முன் ஊதிய உயர்வுக்காக முன்னாள் வீரர்கள் நடத்திய போராட்டம்தான் இதற்குக் காரணம் என்று கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், தொடக்கத்தில் இந்திய வீரர்களுக்கு ஊதியமும், போட்டிகளில் வென்றால் கிடைக்கும் வருவாயில் குறைந்த அளவிலான பங்கு மட்டுமே கிடைத்து வந்தது.

இதை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. உதாரணமாக 100 வீரர்கள் இருந்தால், வருவாயில் 20 சதவீதம் மட்டுமே பிசிசிஐ பிரித்து வீரர்களுக்குச் சரிசமமாக வழங்கும். இதுதான் நிரந்தர வருமானமாக இருந்து வந்தது. மற்ற வகையில், அணியில் இடம் பெறுவதைப் பொறுத்து ஊதியம் இருக்கும்.

ஆனால், இந்த வருவாயில் பங்குத் தொகையை அதிகப்படுத்தி 26 சதவீதமாக வழங்க வேண்டும் என்று நாங்கள் பிசிசிஐயிடம் போராடினோம். எங்களின் போராட்டத்தின் விளைவாக 26 சதவீதத்தை வழங்க பிசிசிஐ முன்வந்தது. இன்று கிரிக்கெட்டைக் காட்டிலும் எந்த விளையாட்டிலும் வீரர்களுக்கு இதுபோன்ற அதிகபட்ச பங்குத்தொகை கிடைக்காது.

கடந்த 2002-ம் ஆண்டு இந்த ஊதியப் பிரச்சினை, பங்குத் தொகை பிரச்சினை எழுந்தது. ஆனால், வீரர்களுக்கும், வாரியத்துக்கும் வெளிப்படையாக யாரும் பிரச்சினை செய்யவில்லை. இரு தரப்புக்கும் கிரிக்கெட் விளையாட்டு வளர வேண்டும், உலகில் சிறந்த வீரர்களாக, அணியாக நாம் திகழ வேண்டும் எனும் நோக்கம் பொதுவானதாக இருந்தது.

இன்று இந்திய அணியிலும் சரி, ஐபிஎல் போட்டியிலும் சரி வீரர்கள் சிறந்த ஊதியத்தைப் பெற்று வருகிறார்கள் என்றால் அதற்கு சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே, ராகுல் திராவிட் உள்ளிட்ட சிலரின் போராட்டமும், விடாமுற்சியும்தான் காரணம் என்று கூறியுள்ளார்.மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...