ருத்ரதாண்டவம் ஆடிய பொல்லார்டு: மனைவியிடம் வருத்தம் தெரிவித்த பதிவு

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்

மும்பை அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பொல்லார்டு நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 31 பந்துகளில் 83 ரன்கள் தனது அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.

பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து 197 ரன்கள் குவித்தது. இதனால் பஞ்சாப் அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் மும்பை அணியின் பொல்லார்டு ருத்ரதாண்டவம் ஆடி, நேற்றைய ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்றார்.

நேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மகிழ்ச்சியாக இருந்தாலும் தனது மனைவியிடம் வருத்தம் தெரிவித்துள்ளார் பொல்லார்டு.

ஏனெனில் நேற்று அவருக்கு திருமணநாள். இந்த ஆண்டு நமக்கு சிறப்பாக ஆண்டாக அமையவும், திருமண நாளன்று நான் உன்னுடன் இருக்க முடியாத நிலைக்கு வருந்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

இந்த ஜோடிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers