அஸ்வின் பந்தை அடித்து நொறுக்க வேண்டும்..சிக்ஸர் மழை பொழிந்த பொல்லார்ட் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியின் போது, அஸ்வின் பந்து வீச்சை அடிக்க முடிவு செய்திருந்ததாக ஆட்ட நாயகன் விருது வென்ற பொல்லார்ட் கூறியுள்ளார்.

நேற்று பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கிடையே நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை அணி தோற்றுவிடும் என்று நினைத்த போது, அந்தணியின் கேப்டனான பொல்லார்ட் சிக்ஸர் மழை பொழிந்து மும்பை அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.

31 பந்துகளை சந்தித்த அவர் 83 ஓட்டங்கள் குவித்தார். இதில் 10 சிக்ஸர்கள் அடங்கும். இந்நிலையில் இப்போட்டி முடிந்த பின் அவர் கூறுகையில், இந்த மைதானத்தில் சுழற் பந்து அந்தளவிற்கு எடுபடாத்தால், நாங்கள் அஸ்வினை குறி வைத்தோம்.

இதனால் அவர் பந்தை அடித்து ஆட முடிவு செய்திருந்தோம் என்று கூறியுள்ளார். அவர் சொன்னது போன்ற அஸ்வின் ஓவர்களிலும் பொல்லார்ட் சிக்ஸர்கள் பறக்கவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers