பரபரப்பான கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி!

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் போட்டியின் 22 வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் குவித்தது.

ஐதராபாத் அணி சார்பில் டேவிட் வார்னர் 70 ரன்களை குவித்திருந்தார். பஞ்சாப் அணி சார்பில், முஜீப், முகமது சமி, அஷ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைகைப்பற்றினர்.

151 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் துவக்க ஆட்டக்காரர் கெய்ல் 16 ரங்களில் வெளியேற, அடுத்து களமிறங்கிய அகர்வால், ராகுலுடன் இணைந்து நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.

ஒரு கட்டத்தில் இருவரும் அரைசதம் கடக்க மயங்க் அகர்வால் 55 ரங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் சரிய கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது.

ரசிகர்கள் அனைவரும் பரபரப்பில் இருக்க 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து பஞ்சாப் அணி தன்னுடைய சொந்த மண்ணில் வெற்றியை பதிவு செய்தது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்