2019 ஐபிஎல்: இதுவரை அதிக சிக்சர்கள் விளாசிய அணி எது தெரியுமா?

Report Print Kabilan in கிரிக்கெட்

ஐ.பி.எல் தொடரில் இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 57 சிக்சர்கள் விளாசி முதல் இடத்தில் உள்ளது.

2019 ஐ.பி.எல் கடந்த மாதம் 23ஆம் திகதி தொடங்கியது. இதுவரை 21 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 போட்டிகளில் 4 வெற்றியை பெற்றுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

கொல்கத்தா அணியில் ஆந்த்ரே ரஸல் சிக்சர் மழைகளை பொழிந்து வருகிறார். இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இதுவரை நடந்த ஆட்டங்களில் 57 சிக்சர்களை விளாசி முதலிடத்தில் உள்ளது.

அந்த அணியில் ரஸல் 22 சிக்சர்களையும், நிதிஷ் ரானா 12 சிக்சர்களையும் விளாசியுள்ளனர். மும்பை அணி 32 சிக்சர்களுடன் 2வது இடத்திலும், பெங்களூரு அணி 31 சிக்சர்களுடன் 3வது இடத்திலும் உள்ளன.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 30 சிக்சர்களுடன் 4வது இடத்திலும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 29 சிக்சர்களுடன் 5வது இடத்திலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 29 சிக்சர்களுடன் 6வது இடத்திலும் உள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 25 சிக்சர்களுடன் 7வது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 24 சிக்சர்களுடன் 8வது இடத்திலும் உள்ளன.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்