பெங்களூரு அணியின் தொடர் தோல்வி குறித்து வேதனையுடன் கூறிய கோஹ்லி

Report Print Kabilan in கிரிக்கெட்

ஒவ்வொரு போட்டியிலும் தோல்வி அடைந்துவிட்டு, அதற்காக நொண்டிசாக்கு சொல்ல முடியாது என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

2019 ஐ.பி.எல் தொடரில் விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. நேற்று நடந்த டெல்லி அணிக்கு எதிரான போட்டியிலும் பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதனால் மிகுந்த வேதனையடைந்த பெங்களூரு அணித்தலைவர் விராட் கோஹ்லி, தோல்வி குறித்து கூறுகையில், ‘160 ஓட்டங்கள் குவித்தால் கடும் போட்டியை கொடுக்க முடியும் என்று நினைத்தோம்.

சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்ததால் 150 ஓட்டங்கள் தான் இலக்காக நிர்ணயிக்க முடிந்தது. 2வது இன்னிங்சில் பந்துவீச்சுக்கு ஏற்ற வகையில் ஆடுகளம் அமையவில்லை. இந்த ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை என்பதே உண்மையாகும்.

ஒவ்வொரு போட்டியிலும் தோல்வி அடைந்துவிட்டு அதற்கான காரணம் தேடுவதும், அதனை பேசுவதும் முறையானது அல்ல. நாள்தோறும் தோல்விக்கு நொண்டிசாக்கு கூற முடியாது. நாங்கள் சரியாக விளையாடாததே தோல்விக்கு காரணம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்