டோனியின் கைகளைப் பிடித்து வாழ்த்து கூறிய பாட்டி! வைரலாகும் வீடியோ

Report Print Kabilan in கிரிக்கெட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் டோனியைக் காண வான்கடே மைதானத்திற்கு பாட்டி ஒருவர் வந்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

டோனிக்கு சென்னை மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களில் உள்ள மைதானங்களிலும் ஆதரவு இருக்கும். வயது வித்தியாசம் இல்லாமல் டோனிக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அந்த வகையில் நேற்று நடந்த மும்பை அணிக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸின் போட்டியைக் காண, டோனியின் ரசிகையான பாட்டி ஒருவர் வந்திருந்தார்.

மும்பையைச் சேர்ந்த அந்த பாட்டி, டோனி விளையாடும் சென்னை அணியை ஆதரிப்பதற்காக தனது பேத்தியுடன் வந்தார். போட்டி முடிந்ததும் இதுகுறித்து டோனியிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உடனே அந்த பாட்டியைக் காண டோனி வந்தார். டோனியைக் கண்ட குறித்த பாட்டி அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு வாழ்த்தினார். டோனியும் அவருடன் பணிவாக பேசி செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers