டோனி.... டோனி: தோற்றாலும் மும்பை மைதானத்தை அதிர வைத்த தல

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்

மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட்டின் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை தோற்கடித்தது.

தனது முதல் 3 ஆட்டங்களில் வரிசையாக வெற்றியடைந்த சென்னை அணிக்கு இது முதலாவது தோல்வியாகும். 4-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணிக்கு இது 2-வது வெற்றியாகும்.

என்னதான் நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணி தோற்றாலும், மும்பை மைதானத்தில் டோனிக்கு கொடுத்த வரவேற்பால் மைதானமே அதிர்ந்துபோனது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடினால் அந்த அணியின் கேப்டன் டோனிக்கு ரசிகர்கள் அரங்கம் அதிர வரவேற்பு கொடுப்பது வழக்கம்.

ஆனால், மும்பை வான்க்டே மைதானத்தில் டோனி பேட்டிங் செய்ய வரும்போது, ரசிகர்கள் டோனி.... டோனி என மைதானம் அதிரும் அளவிற்கு வரவேற்பு அளித்தது மும்பையா? இல்லை சென்னையா? என எண்ணும் அளவிற்கு உற்சாகமாக இருந்தது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...