மிரட்டலான பந்துவீச்சால் சென்னை அணியை காலி செய்த மலிங்காவின் வீடியோ!

Report Print Kabilan in கிரிக்கெட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 3 முக்கிய விக்கெட்டுகளை மும்பை அணி வீரர் மலிங்கா வீழ்த்தி அசத்தினார்.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல் லீக் போட்டியில் சென்னை-மும்பை அணிகள் மோதின. முதலில் ஆடிய மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 170 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் ஆடிய சென்னை அணி 8 விக்கெட் இழப்புக்கு 133 ஓட்டங்களே எடுத்து தோல்வியடைந்தது. மலிங்காவின் மிரட்டலான பந்துவீச்சு மும்பை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

சென்னை அணியின் அபாயகரமான வீரர்களான ஷேன் வாட்சன், கேதார் ஜாதவ், டுவெய்ன் பிராவோ ஆகியோரின் விக்கெட்டுகளை மலிங்கா வீழ்த்தி அசத்தினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers