அடிமேல் அடி வாங்கும் கோஹ்லி படை! டிவில்லியர்ஸ் கூறிய அறிவுரை

Report Print Kabilan in கிரிக்கெட்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, வீரர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று டி வில்லியர்ஸ் அறிவுரை கூறியுள்ளார்.

ஐ.பி.எல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி விளையாடிய 3 லீக் ஆட்டங்களிலும் தோல்வியையே சந்தித்துள்ளது.

இன்று இரவு ராஜஸ்தான் அணியை சந்திக்கும் பெங்களூரு தனது முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் உள்ளது. இந்நிலையில், அதிரடி துடுப்பாட்ட வீரரான டி வில்லியர்ஸ், தனது அணி வீரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

அவர் கூறுகையில், ‘சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் படுதோல்வி அடைந்த பின்னர், ஓட்டலுக்கு பேருந்தில் திரும்பி கொண்டிருந்தோம். அப்போது அடுத்தடுத்து சீட்டில் அமர்ந்திருந்தோம். அவர் என்னைப் பார்த்தார். நான் அவரை பார்த்தேன்.

அந்த சூழ்நிலையில் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை. ஒருவருக்கொருவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதாயிற்று. நாங்கள் எதிர்பார்த்தது இது அல்ல. இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே ஒன்றாக இணைந்தோம்.

மிகவும் கடினமான வகையில் வலைப்பயிற்சி எடுத்தோம். சிறப்பாகவே தயாரானோம். அணி சரியான பேலன்ஸ் கொண்டதாக உணர்ந்தோம். நாங்கள் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், வெற்றி கிடைக்கவில்லை.

எங்களது உடனடியான வேலை, அணிகள் மீது நம்பிக்கை வைக்காமல் ஒவ்வொரு வீரர்களும் அவர்களது மீது நம்பிக்கை வைக்க வேண்டும். ஆனால், ஒவ்வொருவரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். கிரிக்கெட் ஒரு அணி விளையாட்டு.

ஆனால், துடுப்பாட்ட வீரர் அல்லது பந்துவீச்சாளர் கடினமான நேரத்தில் எங்களுக்காக கடுமையாக போராட வேண்டும். அவர்களுடைய சொந்த திறமை மீது நம்பிக்கை வைக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers