சிக்ஸர் பறக்கவிட்ட ரிஷப் பாண்டின் மிடில் ஸ்டெம்பை தெறிக்கவிட்ட ஷமி! துள்ளிக் குதித்த அஸ்வின் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

டெல்லி அணிக்கெதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ரிஷப் பாண்டின் விக்கெட்டை ஷமி தன்னுடைய துல்லியமான யார்க்கர் மூலம் போல்டாக்கி வெளியேற்றியுள்ளார்.

நேற்று நடைபெற்ற டெல்லி-பஞ்சாப் அணிகளுக்கிடையேயான போட்டியில் வெற்றிக்கு அருகே சென்ற டெல்லி அணி, துடுப்பாட்ட வீரர்களின் அவசரத்தால் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இப்போட்டியில் டெல்லி அணியின் இளம் வீரரான ரிஷப்பாண்ட் பஞ்சாப் அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார்.

இவர் களத்தில் இருக்கும் வரை டெல்லி அணியின் வெற்றி உறுதியாக இருந்தது. இவர் பஞ்சாப் அணியின் பந்து வீச்சையும் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது டெல்லி அணியின் வெற்றிக்கு 23 பந்துக்கு 21 ஓட்டங்கள் என்ற போது, ஷமி விசிய பந்து வீச்சில் பாண்ட் துல்லியமான யார்க்கர் மூலம் போல்டானார்.

அதற்கு முந்திய பந்தில் சிக்ஸர் அடித்திருந்த பாண்டை அடுத்த பந்திலே போல்டாக்கி வெளியேற்றியதால், அணியின் தலைவர் அஸ்வின் உட்பட அனைவரும் துள்ளிக் குதித்தனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...