டோனிக்கு எதிராக பந்து வீசுவது எங்கள் அணிக்கு கடினமாக இருந்தது! தோல்வி குறித்து பேசிய ரஹானே

Report Print Kabilan in கிரிக்கெட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், டோனிக்கு எதிராக பந்து வீசுவது தங்கள் அணி வீரர்களுக்கு கடினமாக இருந்ததாக ராஜஸ்தான் கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் ஐ.பி.எல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சென்னை அணி கேப்டன் டோனி 46 பந்துகளில் 75 ஓட்டங்கள் விளாசியது அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது.

இந்நிலையில் 3வது தோல்வியை சந்தித்தது ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

‘இந்த தோல்வி மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. நாங்கள் முதல் 10 ஓவர்களில் நன்றாக செயல்பட்டோம். ஆனால், கடைசி 5 ஓவர்களில் சென்னை அணியின் ஸ்கோரை நாங்கள் கட்டுப்படுத்த தவறிவிட்டோம். அதுவே எங்களுக்கு பாதிப்பாக அமைந்தது.

டோனிக்கு எதிராக பந்து வீசுவது எங்கள் அணி வீரர்களுக்கு கடினமாக இருந்தது. 6 ஓவர்களுக்கு பிறகு பந்தை சரியான முறையில் பிடித்து பந்து வீசுவதே சிரமமாக இருந்தது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் சிறப்பாக பந்து வீசியதுடன், விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

நாங்கள் பேட்டிங்கில் இன்னும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். கடைசி 3 லீக் ஆட்டங்களிலும் நாங்கள் சிறப்பாக விளையாடினாலும் அதிர்ஷ்டம் இல்லை’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்