டெல்லி அணியின் வெற்றியை பறித்த தமிழக வீரர் அஸ்வினின் ரன் அவுட்! துல்லியமாக த்ரொ செய்த வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

டெல்லி அணிக்கெதிரான போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் செய்த ரன் அவுட் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி-பஞ்சாப் அணிகள் மோதின. இப்போட்டியில் வெற்றியின் அருகில் சென்ற டெல்லி அணி ஷமியின் அற்புதமான பந்து வீச்சால் பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெறுவதற்கு ஷமி மட்டும் முக்கிய காரணமில்லை, பஞ்சாப் அணியின் தலைவரும், தமிழக வீரருமான அஸ்வினும் ஒரு காரணம் தான், ஏனெனில் டெல்லி 16. 4 ஓவருக்கு 144 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருந்தது.

இதனால் டெல்லி அணியின் வெற்றிக்கு 20 பந்துக்கு 23 ஓட்டங்கள் தேவை என்பதால், அப்போது ஆல் ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் இறங்கினார்.

இவர் ஏற்கனவே பல ஐபிஎல் போட்டிகளில் கடைசி கட்டத்தில் வெற்றி தேடித்தந்துள்ளார். இதனால் இவரின் விக்கெட்டை எடுத்தால் பஞ்சாப் வெற்றி பெற்றுவிடலாம் என்ற போது, தான் சந்தித்த முதல் பந்திலே ஆப் ஸ்டிரைட் திசையில் அடித்து விட்டு ஓடிய மோரிசை அஸ்வின் தன்னுடைய துல்லியமான த்ரோ மூலம் ரன் அவுட் செய்தார்.

அதன் பின் போட்டி பஞ்சப் பக்கம் வந்தது. இறுதியில் டெல்லி அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்