2019 ஐபிஎல்-லில் முதல் ஹாட்ரிக் விக்கெட்கள் வீழ்த்தி மிரட்டிய பந்துவீச்சாளர்.. வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in கிரிக்கெட்

ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் வீரர் ஷாம் கரண் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றியதன் மூலம் இந்தாண்டு ஐபிஎல் அரங்கில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.

ஐபிஎல் தொடரின் 13வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை நேற்று எதிர்கொண்டது.

இப்போட்டியில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி அசத்தினார். டெல்லி அணி பேட்டிங் செய்த போது போட்டியின் 18வது ஓவரை வீசிய ஷாம் கரண், அந்த ஓவரின் 4வது பந்தில் இங்ராமை அவுட்டாக்கினார்.

பின் அதே ஓவரின் கடைசி பந்தில் ஹர்சல் படேலை, கரண் வெளியேற்றினார். தொடர்ந்து 20வது ஓவரை மீண்டும் வீச வந்த கரண் முதல் பந்தில் டெல்லியின் ரபாடாவை போல்டாக்கினார். இதையடுத்து இவருக்கு ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றும் வாய்ப்பு கிடைத்தது .

ஹாட்ரிக் பந்தை சந்தீப் லாமிசானே எதிர்கொண்டார். இதையும் கரண் அசுர வேகத்தில் யார்க்கராக வீச, லாமிசானே தடுக்க முயன்ற போதும் போல்டானார்.

இதன் மூலம் இந்தாண்டு ஐபிஎல் அரங்கில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய முதல் பவுலர் என்ற பெருமை பெற்றார் ஷாம் கரண்.

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்