இரண்டு வீரர்கள் அதிரடி சதம் விளாசல்! கோஹ்லி அணியை அலறவிட்ட ஹைதராபாத்

Report Print Kabilan in கிரிக்கெட்

ஹைதராபாத்தில் நடந்து வரும் பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல் லீக் போட்டியில், வார்னர்-பேர்ஸ்டோ இருவரும் சதம் விளாசியதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 231 ஓட்டங்கள் குவித்துள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது நடந்து வருகிறது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.

அதன்படி ஹைதராபாத் அணி துடுப்பாட்டத்தை துவங்கியது. ஜானி பேர்ஸ்டோ, டேவிட் வார்னர் இருவரும் பெங்களூரு அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.

குறிப்பாக இங்கிலாந்து வீரரான பேர்ஸ்டோ ருத்ரதாண்டவம் ஆடினார். இதன்மூலம் 52 பந்துகளில் அவர் தனது 2வது ஐ.பி.எல் சதத்தை விளாசினார். அவர் 56 பந்துகளில் 7 சிக்சர்கள், 12 பவுண்டரிகளுடன் 114 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

BCCI

BCCI

அவரைத் தொடர்ந்து அதிரடியில் மிரட்டிய வார்னரும் சதம் விளாசினார். ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 231 ஓட்டங்கள் குவித்துள்ளது.

வார்னர் 55 பந்துகளில் 5 சிக்சர்கள், 5 பவுண்டரிகளுடன் 100 குவித்து களத்தில் இருந்தார். இதனைத் தொடர்ந்து இமாலய இலக்கை நோக்கி பெங்களூரு அணி விளையாடி வருகிறது.

PTI

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்