எதிரணியை மிரட்ட சென்னை அணியில் புதிதாக களமிறங்கும் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்! யார் அவர் தெரியுமா?

Report Print Kabilan in கிரிக்கெட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் லுங்கி நிகிடிக்கு பதிலாக, நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் குகெலெஜின் சேர்க்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி, ஐ.பி.எல்-யில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்திருந்தார். ஆனால், இலங்கைக்கு எதிரான தொடரின்போது நிகிடி காயமடைந்தார்.

இதன் காரணமாக ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக மாற்று வீரர் சென்னை அணியில் தெரிவு செய்யப்படாமல் இருந்த நிலையில், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லேவும் அணியில் இருந்து விலகினார்.

குடும்ப சூழல் காரணமாக அவர் விலகியதாக கூறப்பட்ட நிலையில், சென்னை அணிக்கு வேகப்பந்து வீச்சில் பின்னடைவு ஏற்பட்டது.

இந்நிலையில், தற்போது நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் குகெலெஜின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

27 வயதாகும் ஸ்காட் 2 ஒருநாள் போட்டிகளில் 5 விக்கெட்டுகளையும், 4 டி20 போட்டிகளில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers