வலைப்பயிற்சியிலேயே சிக்சர்களை பறக்க விடும் டோனி! வெளியான வீடியோ

Report Print Kabilan in கிரிக்கெட்

ஐ.பி.எல் போட்டிகள் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

12வது ஐ.பி.எல் டி20 தொடர் வரும் 23ஆம் திகதி தொடங்க உள்ளது. முதல் போட்டியில் கோஹ்லியின் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோத உள்ளதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு தீவிர பேட்டிங் பயிற்சியில் டோனி ஈடுபட்டார். அப்போது அவர் இறங்கி வந்து சிக்சர்களை விளாசினார். இதுதொடர்பான வீடியோவை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

டோனியுடன் சக வீரர்கள் அனைவரும் பயிற்சியில் ஈடுபட்டு வருவதால், அவர்களுக்கு எந்தவிதத்திலும் இடையூறு செய்யமாட்டோம் என்று சென்னை அணி ரசிகர்களான ‘Yellow Army' ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்