என் வாழ்க்கையில் மறக்க முடியாத போட்டி அது! விராட் கோஹ்லி நெகிழ்ச்சி

Report Print Kabilan in கிரிக்கெட்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 2010ஆம் ஆண்டு நடந்த போட்டி தான் தனது வாழ்வில் மறக்க முடியாத போட்டி என்று பெங்களூரு அணித்தலைவர் விராட் கோஹ்லி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் வரும் 23ஆம் திகதி தொடங்குகிறது. முதல் போட்டியில் விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணியும், டோனி தலைமையிலான சென்னை அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்நிலையில், பெங்களூரு அணி சார்பில் தனக்கு பிடித்த போட்டி குறித்து கோஹ்லி தெரிவித்துள்ளார். அது 2010ஆம் ஆண்டு நடந்த மும்பை இந்தியன்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியாகும்.

அப்போட்டியில் முதலில் ஆடிய மும்பை அணி 7 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது.

இந்தப் போட்டி குறித்து கோஹ்லி தற்போது நினைவுகூர்ந்துள்ளார். அவர் கூறுகையில், ‘2010ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டி இன்னும் நினைவிருக்கிறது.

அந்தப் போட்டியில் நான் அடித்த ஓட்டங்கள் 47 தான். ஆனால், கடுமையாக போராடி அந்தப் போட்டியில் கடைசி பந்தில் தோல்வியை தழுவினோம். பெங்களூரு அணிக்கு நான் ஆடியதில் அதுதான் மறக்க முடியாத போட்டி. அந்தப் போட்டியில் சிறப்பாக ஆடியும், வெற்றியின் அருகில் சென்று தோல்வியை சந்தித்தோம்.

கடைசி ஓவரை வீசிய ஜாகீர் கான் உட்பட மும்பை அணியில் இருந்த டெண்டுல்கர், ஹர்பஜன் சிங் என பலரும் எனது ஆட்டத்தை பார்த்து பாராட்டினர். என் கிரிக்கெட் வாழ்வில் மறக்க முடியாத, முக்கியமான தருணம்’ என தெரிவித்துள்ளார்.

விராட் கோஹ்லி அப்போட்டியில் 24 பந்துகளில் 47 ஓட்டங்கள் குவித்து அவுட் ஆனார். கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், கோஹ்லி கடைசி பந்தில் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்