டோனியின் அருமை இப்போது புரிகிறதா என வறுத்தெடுத்தடுத்த ரசிகர்கள்! ரிஷப் பாண்ட் கொடுத்த விளக்கம்

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான தொடரில் சொதப்பியது குறித்து இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பாண்ட் விளக்கமளித்துள்ளார்.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின், கடைசி இரண்டு போட்டியில் டோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, இளம் வீரர் ரிசப் பாண்ட்க்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

ஆனால் அவர் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் சொதப்பியதால், பலரும் டோனி இல்லாத அருமை இப்போது தெரிகிறதா என்று கூற ரசிகர்கள் கமெண்ட் தெறிக்கவிட்டனர்.

அது தொடர்பான மீம்ஸ்கள் கூட சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.


இந்நிலையில் இது குறித்து ரிஷப் பாண்ட் கூறுகையில், டோனி ஒரு மிகப் பெரிய வீரர், அவருடன் என்னை ஒப்பிடுவது சரியானது அல்ல, அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டு வருகிறேன்.

டோனியையும், என்னையும் இணைத்து வைத்து பேசுவதை நான் கண்டு கொள்ளமாட்டேன், நான் என்னுடைய வேலையை தொடர்ந்து செய்வேன், ஒவ்வொரு போட்டியிலும் நான் என்னை எப்படி உயர்த்திக் கொள்வது என்பதைப் பற்றியே இருக்குமே தவிர இதைப் பற்றி எல்லாம் எனக்கு கவலையில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்