துப்பாக்கி சூட்டின் எதிரொலி: தொடரை ரத்து செய்ததா வங்கதேச கிரிக்கெட் வாரியம்?

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

நியூசிலாந்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில், தொடரை வங்கதேச கிரிக்கெட் வாரியம் ரத்து செய்துள்ளதாக பிரபல ஸ்போர்ட்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் இருக்கும் அல் நூர் மசூதியில் இன்று நடந்த துப்பாக்கி சூட்டில் பலர் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவத்திலிருந்து தொழுகைக்காக சென்ற வங்கதேச அணி வீரர்களும் உயிர் தப்பினர்.

இந்நிலையில் நாளை நடைபெறவிருந்த நியூசிலாந்து- வங்கதேச அணி மோதும் டெஸ்ட் தொடர் ரத்து செய்யப்பட்டது.

இதற்கிடையே தொடரையே வங்கதேச கிரிக்கெட் வாரியம் ரத்து செய்துவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் குறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டன், இதற்குமுன்பு இதுபோன்றதொரு மோசமான சம்பவம் நடந்ததில்லை, எனவே இதை கறுப்பு நாள் என்றே குறிப்பிடுவேன்.

மக்கள் பாதுகாப்பாக தங்கள் வழிபாட்டை நடத்திய இடத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது, நியூசிலாந்து சமூகத்தில் இதுபோன்ற சம்பவங்களுக்கு இடமில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers