ஐபிஎல் போட்டி: டெல்லி அணியில் இணைகிறார் சவுரவ் கங்குலி…!

Report Print Abisha in கிரிக்கெட்

ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி இடம் பெற உள்ளதாக அந்த அணி தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், 2019 சீசனில் கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி செயல்படுவார் என்பதுதான்.

இது குறித்து அந்த அணி தனது ட்விட்டர் பக்கத்தில் ''வணக்கம் ராயல் பெங்கால் டைகர்'' என கங்குலியை வரவேற்றுள்ளது.


ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை, பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இரண்டாவது ஸ்ரீ நாளில் டெல்லி அணி, மும்பை அணியை மோத உள்ளது.

டெல்லி இதுவரை ஐபிஎல் ஃபைனலுக்கு முன்னேறியதில்லை. இதனை அடுத்து இந்த போட்டியில் புது முகங்களுடன் டெல்லி அணி களம் இறங்க உள்ளது.

முன்னதாக, கங்குலி, ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்தார். 2012 வரை கொல்கத்தாவுக்காக ஆடினார் கங்குலி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...