சென்னையில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது?

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கும் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை வருகிற 16ம் திகதி தொடங்குகிறது.

12வது ஐபிஎல் போட்டிகள் 23ம் திகதி தொடங்கும் நிலையில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- பெங்களூரு றொயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதற்கான டிக்கெட் விற்பனை 16-ஆம் திகதி முதல் தொடங்குகிறது. ஆன்லைன் டிக்கெட் விற்பனை காலை 11.30 மணிக்கு தொடங்கும்.

இதேபோன்று டிஎன்சிஏ மூலம் கவுண்டர் டிக்கெட் விற்பனையும் 11.30 மணிக்கு தொடங்கும்.

சி, டி மற்றும் இ கீழ்பகுதி-ரூ.1300, சி மற்றும் இ-மேல் பகுதி ரூ.2500, விருந்தினர் டிக்கெட்டுகள்-ரூ.5000, ரூ. 6,500 விலையில் விற்பனையாகிறது.

இந்நிலையில் மீதமுள்ள சிஎஸ்கே உள்ளூர் ஆட்டங்கள் டிக்கெட் விற்கும் திகதி பின்னர் அறிவிக்கப்படும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers