இந்த முறை கோப்பை எங்களுக்கு தான்..கோஹ்லி படையை எதிர்கொள்ள ஆவலாக இருக்கும் அவுஸ்திரேலியா வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் என்று அந்தணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி கூறியுள்ளார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா அணி அங்கு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் டி20 தொடர் முடிந்த நிலையில் இரு அணிகளுக்கிடையேயான ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் நான்கு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இரு அணிகளு 2-2 என்று சமநிலையில் உள்ளதால், நாளை நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடரைக் கைப்பற்றும்.

இதனால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அவுஸ்திரேலியா அணி விக்கெட் கீப்பரான அலெக்ஸ் கேரி, தொடரின் தொடக்கத்தில் நாங்கள் நெருக்கடிக்கு உள்ளானோம். முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றியை நெருங்கி வந்து தோல்வியடைந்தோம். ஆனால் தற்போது 2-2 எனத் தொடரை சமன் செய்துள்ளோம்.

தொடரை தீர்மானிக்கும் நாளைய போட்டியில் விளையாட ஆவலாக இருக்கிறோம். இந்தியா தோல்வில் இருந்து மீண்டு வீறுகொண்டு திரும்பும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், நாங்கள் இந்தியாவை எதிர்கொள்ள ஆவலாக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

மேலும் இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், கோஹ்லி தலைமையிலான இந்திய அணி 50 வெற்றிகளை ருசிக்கும். 50-க்கு மேல் வெற்றிகளை பெற்ற நான்காவது கேப்டன் என்ற பெருமையை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers