டோனி தான் பாதி கேப்டனாக செயல்படுகிறார்..கோஹ்லி களத்தில் சிரமப்படுகிறார்! முன்னாள் இந்திய அணி வீரர் கருத்து

Report Print Kabilan in கிரிக்கெட்

ஒருநாள் போட்டிகளில் விளையாடும்போது பாதி கேப்டனாக டோனிதான் செயல்படுகிறார், கோஹ்லி களத்தில் மிகவும் சிரமப்படுகிறார் என முன்னாள் இந்திய அணி வீரர் பிஷன் சிங் பேடி கருத்து தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. நேற்றைய தினம் டெல்லியில் உள்ள அவுஸ்திரேலிய தூதரகம் சார்பில் அவுஸ்திரேலிய அணிக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.

அப்போது நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் இந்திய அணி வீரர் பிஷன் சிங் பேடி ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில்,

‘டோனிக்கு ஏன் கடைசி இரு ஒருநாள் போட்டிகளில் ஓய்வு அளித்தார்கள் என எனக்குப் புரியவில்லை. வியப்பாக இருக்கிறது. இதைப்பற்றி யாரும் பேசவில்லை. டோனி இல்லாத வெற்றிடத்தை பேட்டிங்கிலும், கீப்பிங் பணியிலும் 4வது ஒருநாள் போட்டியில் பார்க்க முடிந்தது.

ஒருநாள் அணியில் டோனி பாதி கேப்டன் போல் செயல்பட்டார். டோனி இல்லாமல் கோஹ்லி அன்று களத்தில் கேப்டன் பணியை கவனிக்க மிகவும் சிரமப்பட்டார். டோனி இன்னும் இளமையான வீரர் இல்லை தான்.

ஆனாலும் அவரின் சேவை அணிக்குத் தேவை. அமைதியாக இருந்துகொண்டு அணிக்கு பல்வேறு ஊக்கங்களை அளிப்பார். ஒரு கேப்டனுக்கு டோனியின் ஆலோசனை அவசியம். டோனி இல்லாமல் கோஹ்லி செயல்படுவது கடினம். டோனி இல்லாமல் அணியைக் கொண்டு செல்வது நல்ல அறிகுறி அல்ல’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers