உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு விளையாட தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு அதிகம்! எப்படி தெரியுமா?

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் ரிஷப் பாண்டின் சொதப்பல் கீப்பிங்கால், தமிழக வீர்ர தினேஷ் கார்த்திக்கிற்கு உலகக்கோப்பை போட்டியில் விளையாடுவதற்கு வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் ரிஷப் பாண்ட ஸ்டம்பிங் மிஸ் செய்தது மிகப் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

இதற்கு தான் டோனி வேண்டும், இப்போது தெரிகிறதா டோனியின் அருமை என்றெல்லாம் சமூகவலைத்தளங்களில் மீம்ஸ்கள் பறந்தன.

இந்நிலையில் இந்த போட்டியில் கீப்பிங்கில் பாண்ட் சொதப்பியுள்ளதால், அவருக்கு உலகக்கோப்பை போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் என்று கூறப்படுகிறது.

பேட்டிங் என்ன தான் விளையாடினாலும், இக்கட்டான நிலையில் கீப்பிங் என்பது மிகவும், அதில் சிறிய அளவில் தவறு செய்துவிட்டாலும், அது பெரிய தோல்வியை கொடுக்கும்.

இதனால் இதே தவறை பாண்ட் உலகக்கோப்பையில் செய்துவிட்டால், அது பிரச்சனையாகிவிடும். ஏற்கனவே தினேஷ் கார்த்திக் தனக்கு கொடுக்கப்படும் வாய்ப்பின் போது, சிறப்பான ஆட்டத்தை கொடுத்து வருவதால், இந்திய தேர்வு குழு கார்த்திக்கிற்கு உலககோப்பை தொடரில் அதிக வாய்ப்பு கொடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்திய அணியின் முன்னாள் வீரரான கங்குலி கூட, சமீபத்திய பேட்டியில் உலகக்கோப்பை தொடருக்கு தினேஷ் கார்த்திக் அவசியம், ரிஷப் பாண்ட அவருக்கான வாய்ப்பிற்காக காத்திருக்கலாம் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers