3வது முறையாக இரட்டை சதம் விளாசிய ராஸ் டெய்லர்!

Report Print Kabilan in கிரிக்கெட்

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் 3வது முறையாக இரட்டை சதம் விளாசினார்.

நியூசிலாந்து-வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய வங்கதேச அணி 211 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 432 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ராஸ் டெய்லர் அபாரமாக விளையாடி 212 பந்துகளில் 19 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 200 ஓட்டங்கள் விளாசினார்.

இது ராஸ் டெய்லருக்கு சர்வதேச டெஸ்டில் 3வது இரட்டை சதமாகும். டெய்லர் 92 டெஸ்ட் போட்டிகளில் 18 சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹென்றி நிக்கோலஸ் 107 ஓட்டங்களும், கேன் வில்லியம்சன் 74 ஓட்டங்களும் விளாசினர். இதனைத் தொடர்ந்து வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. 4வது நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 3 விக்கெட் இழப்புக்கு 80 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers