எளிதான ஸ்டெம்பிங்கை மிஸ் செய்த ரிஷப் பாண்ட்... டோனி போல வருமா என கத்திய ரசிகர்கள்.. வீடியோ

Report Print Raju Raju in கிரிக்கெட்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டின் மோசமான விக்கெட் கீப்பிங் ரசிகர்களை வெறுப்பில் ஆழ்த்தியது.

இந்தியா - அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான 4ஆம் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டோனி அணியில் இடம்பெறாத நிலையில் விக்கெட் கீப்பிங் பணியை ரிஷப் பண்ட் செய்தார்.

படுமோசமாக விக்கெட் கீப்பிங் செய்த அவர் பல பந்துகளை பிடிக்க திணறினார்.

ஒரு கட்டத்தில் ரிஷப் பண்ட் எளிதான ஸ்டம்பிங் ஒன்றை மிஸ் செய்து விட்டார். இதையடுத்து பார்வையாளர்கள் பலர் டோனி டோனி என குரலெழுப்பத் துவங்கினர். இதையடுத்து சில நிமிடங்களில் ட்விட்டரில் தோனி ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டானது.

ரசிகர்கள் பலரும் டோனியின் ஸ்டம்பிங் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ட்விட்டரில் பதிவிட்டு டோனியை மிஸ் செய்வதாகவும், அவரின்இடத்தை வேறு யாராலும் நிரப்பமுடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers