இந்திய அணியை கதிகலங்க வைத்தது எப்படி? அவுஸ்திரேலியா கேப்டன் பின்ச் பெருமிதம்

Report Print Santhan in கிரிக்கெட்
277Shares

இந்திய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் பேட்டிங் சிறப்பாக விளையாடியதே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று அவுஸ்திரேலியா அணியின் தலைவர் பின்ச் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் கோஹ்லி சிறப்பாக விளையாடியும் மற்ற வீரர்கள் சொதப்பியதால், தவான், ராயுடு, டோனி போன்ற வீரர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக தவான் எல்லாம் ஏன் அணியில் வைத்திருக்கிறீர்கள் என்ற கேள்வி கூட பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிகழ்ந்தது.

இதனால் இந்திய அணி நான்கு மற்றும் ஐந்தாவது ஒருநாள் போட்டியில் நிச்சயமாக ஒருவித மாற்றத்துடனே களமிறங்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படி இந்த ஒரே தொடர் மூலம் இந்திய அணியை கதிகலங்க வைத்த அவுஸ்திரேலியா அணியின் தலைவர் ஆரோன் பின்ச் மூன்றாவது போட்டி வெற்றி குறித்து கூறுகையில், எங்கள் வீரர்கள் மிக சிறப்பாக விளையாடினர். பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டதன் மூலமே எங்களால் 300 ஓட்டங்களுக்கு மேல் எடுக்க முடிந்தது.

பேட்டிங்கில் மட்டுமல்ல பந்துவீச்சிலும் நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டதாக உணர்கிறேன். மேக்ஸ்வெல், உஸ்மான் கவாஜா ஆகியோர் மிகச்சிறப்பாக விளையாடினர் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்