அவுஸ்திரேலியா அணிக்கெதிரான போட்டியில் டோனி சிக்ஸர் அடித்ததன் மூலம், அதிக சிக்ஸர் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் அவுஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என்று இந்தியா முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் டோனி 26 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் அவர் இப்போட்டியில் ஒரு இமாலய சிக்ஸர் அடித்ததன் மூலம் இந்திய அணிக்காக அதிக சிக்சர் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மாவை பின்னுக்கு தள்ளி தோனி முதலிடம் பிடித்தார்.
When the 'Lion' walks out to bat in his den 🦁🦁#INDvAUS pic.twitter.com/WKRKGpKgaB
— BCCI (@BCCI) March 8, 2019
ரோகித்சர்மா 216 சிக்ஸருடன் இரண்டாம் இடத்திலும், டோனி 217 சிக்ஸருடன் முதல் இடத்திலும் உள்ளார்.
இதற்கு அடுத்தபடியாக மூன்றாம் இடத்தில் சச்சின் 195 சிக்ஸர், நான்காவது இடத்தில் கங்குலி 189, யுவராஜ் 153, சேவாக் 131 என்று அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.