உலகக்கோப்பைக்கு முன்னர் டோனி ராஞ்சியில் ஆடியதுதான் அவரது கடைசி சர்வதேச போட்டி..!

Report Print Abisha in கிரிக்கெட்
170Shares

உலகோப்பைக்குமுன்னர் நேற்று டோனி ராஞ்சியில் விளையாடிதோடு, அடுத்து வரும் இரு போட்டிகளில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பைக்கு முன்னர் நேற்று டோனி ராஞ்சியில் ஆடியதுதான் அவரது கடைசி சர்வதேச போட்டியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் கடைசி 2 போட்டிகளுக்கு தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது, அவருக்குப் பதிலாக ரிஷப் பந்த் விக்கெட் கீப்பர் பணியை மேற்கொள்வார் என்று சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.

மொஹாலியில் மார்ச் 10ம் திகதியும் டெல்லியில் மார்ச் 13ம் திகதியும் நடைபெறும் இருபோட்டிகளில் டோனி ஆடபோவதில்லை. மேலும் அதேபோல், லேசாகக் காயம்பட்ட மொகமது ஷமி மொஹாலி போட்டியில் ஆடமாட்டார் என்று தெரிகிறது.

ஷமி-க்கு பதிலாக புவனேஷ்வர் குமார் அணிக்குத் திரும்புவார் என்று கூறப்படுகின்றது.

ரிஷப்பந்த்திற்கு கேப்டன், அணித்தேர்வுக் குழுவினர் பயிற்சியாளர் தரப்பு கொடுக்கும் ஆதரவு தற்போது அதிகமாக இருக்கிறது. இது தினேஷ் கார்த்திக் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சேர்கபட வாய்ப்பில்லை என்பது வெளிபடுத்துவதாக உள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்