இந்திய அணியை கதறவிட்ட அவுஸ்திரேலியா..தோல்விக்கு இது தான் காரணம் என கோஹ்லி வேதனை

Report Print Santhan in கிரிக்கெட்
418Shares

அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு முதல் பாதியில் சொதப்பியது தான் என்று அணியின் தலைவர் கோஹ்லி கூறியுள்ளார்.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று ராஞ்சியில் நடைபெற்றது.

இதில் முதலில் ஆடிய அவுஸ்திரேலியா அணி 313 ஓட்டங்கள் குவித்தது. அதன் பின் ஆடிய இந்திய அனி வெற்றியின் அருகில் 48.2 ஓவரில் 281 ஓட்டங்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.

இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து கோஹ்லி கூறுகையில், முதல் இன்னிங்ஸின் முதல் பாதியில் சொதப்பிய நாங்கள் கடைசி கட்டத்தில் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சியாக இருந்தது.

அவுஸ்திரேலியா அணியும் மிக அற்புதமாக விளையாடியது. அவுஸ்திரேலியா அணி எப்படியும் 350+ ரன்களை எங்களுக்கு இலக்காக நிர்ணயிக்கும் என்று தான் நினைத்தோம்.

ஆனால் அதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியை கட்டுப்படுத்தியது மகிழ்ச்சி தான். அவுஸ்திரேலியா பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டதே இன்றைய போட்டியில் அவர்களின் வெற்றிக்கான காரணம்.

இந்த வெற்றிக்கு அவர்கள் நிச்சயம் தகுதியானவர்கள். இந்த தொடர் முடிவடைய இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளது, நாங்கள் நிச்சயம் முழு பலத்துடன் தோல்வியில் இருந்து மீண்டு வருவோம் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்