இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி: 6 ஓட்டங்களில் சதத்தை தவறவிட்ட டி காக்!

Report Print Kabilan in கிரிக்கெட்

செஞ்சூரியனில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில், தென் ஆப்பிரிக்க தொடக்க வீரர் குவிண்டன் டி காக் 94 ஓட்டங்களில் அவுட் ஆகி சதத்தை தவறவிட்டார்.

இலங்கை-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் நடந்து வருகிறது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.

அதன்படி துடுப்பாட்டத்தை துவங்கி தென் ஆப்பிரிக்க அணி விளையாடி வருகிறது. அந்த அணியின் தொடக்க வீரர் குவிண்டன் டி காக் அதிரடியில் மிரட்டினார்.

இலங்கையின் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய அவர், பவுண்டரிகளை அதிகளவில் விரட்டினார். இந்நிலையில் சதத்தை நெருங்கிய டி காக்கை 94 (70) ஓட்டங்களில் திசாரா பெரேரா வெளியேற்றினார். டி காக்-யின் ஸ்கோரில் ஒரு சிக்சர், 17 பவுண்டரிகள் அடங்கும்.

அதிரடியாக விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க அணி தற்போது வரை 30 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 190 ஓட்டங்கள் எடுத்து விளையாடி வருகிறது.

Getty

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்