ஐபிஎல் திருவிழா! வீரர் அடிக்கும் சிக்சர் பந்தை கேட்ச் பிடிக்கும் ரசிகர்களுக்கு என்ன பரிசு தெரியுமா?

Report Print Raju Raju in கிரிக்கெட்

2019 ஐபிஎல் தொடரில் மைதானத்தில் அமர்ந்திருக்கும் ரசிகர்கள் பந்தை கேட்ச் பிடித்தால் அவர்களுக்கு வழங்கப்படும் பரிசு குறித்து தெரியாந்துள்ளது.

2019ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் 23ம் திகதி சென்னையில் தொடங்குகிறது.

இந்த தொடரில் பேட்ஸ்மேன் சிக்சர் அடிக்கும் பந்தை மைதானத்தில் அமர்ந்திருக்கும் ரசிகர்கள் ஒரு கையில் பிடித்தால், ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இது குறித்து பிசிசிஐ தற்காலிக செயல் அதிகாரி அமிதாப் சௌத்ரி கூறுகையில், வீரர்கள் அடிக்கும் சிக்சர்களை ஒரு கையில் பிடிக்கும் ரசிகர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்.

காண்போரை ரசிக்க வைக்கும் வகையில் பந்தை பிடிக்கும் அதிர்ஷ்டசாலி நபர் ஒருவருக்கு கார் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த முறை எஸ்யூவி கார் ஐபிஎல் தொடரின் அதிகாரப்பூர்வமான பார்ட்னராக இணைந்துள்ள நிலையில் அதை பிரபலப்படுத்தவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்