சாஹல் கேட்ட அந்த ஒரு கேள்வி.. விஜய் சங்கரின் பதில் என்ன தெரியுமா?

Report Print Kabilan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் கடைசி ஓவரை வீசியதை விட, ஹிந்தியில் பேசுவது தான் தனக்கு கடினமாக இருக்கிறது என தமிழக வீரர் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடந்த ஒருநாள் போட்டியில், கோஹ்லி தலைமையிலான இந்திய அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கர் 46 ஓட்டங்கள் அடித்ததுடன், பரபரப்பான இறுதி ஓவரை வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பலரும் விஜய் சங்கரை கொண்டாடி வருகின்றனர். முன்னதாக, சுழற்பந்து வீச்சாளர் சாஹல் வேடிக்கையாக விஜய் சங்கரிடம் பேட்டியெடுத்தார். அப்போது, உங்களுக்கு கடைசி ஓவர் வீசுவது பிரஷரா?.. ஹிந்தி பேசுவது பிரஷரா? என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த விஜய் சங்கர், ‘சிரித்துக் கொண்டே ஹிந்தியில் பேசுவது தான் கொஞ்சம் கடினம்’ என்று கூறினார். மேலும், நான் தயாராகவே இருந்தேன். நான் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டு இருந்தேன். அதனையே செயல்படுத்தினேன்’ என தெரிவித்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்