இந்தியாவே தூக்கி வைத்து கொண்டாடும் விஜய்சங்கர்! கடைசி ஓவரில் அவுஸ்திரேலியை கதறவிட்டது எப்படி?

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில், பும்ரா கொடுத்த டிப்ஸ் முக்கிய உதவியாக இருந்தது என்று தமிழக வீரர் விஜய் சங்கர் கூறியுள்ளார்.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த விஜய்சங்கரை இந்திய ரசிகர்கள் ஹீரோவாக தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து விஜய் சங்கர் கூறுகையில், இந்த போட்டியில், நான் ஒரு சவாலுக்கு காத்திருந்தேன். ஏனெனில் நிச்சயமாக கடைசி கட்டத்தில் ஓவர் வீச வேண்டும் என்பதை அறிந்திருந்தேன்.

குறிப்பாக 43-44 வது ஒவருக்குப் பிறகு நிச்சயம் எந்த நேரம் வேண்டுமானாலும் பந்து வீச அழைக்கப்படுவேன். ஒரு வேளை அது கடைசி ஓவராக இருந்தால், அதுவும் 10 அல்லது 15 ஓட்டங்கள் தேவை என்றால் நிச்சயம் விட்டுக் கொடுக்க கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.

என்னை நான் தயார்படுத்திக் கொண்டேன். வேகப்பந்து வீச்சாளரான பும்ரா, என்னிடம் வந்து பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகிறது என்றார், இதனால் சரியான லெந்த்தில் வீசுவது அவசியம் என்றார் அதாவது ஸ்டம்புகளை நோக்கி வீச வேண்டும் என்றார்.

அவர் கூறியவுடன் நான் மனரீதியாக தெளிவடைந்தேன். ஆகவே 11 ரன்களை தடுக்க வேண்டுமெனில் நேராக ஸ்டம்புக்கு வீச வேண்டும், விக்கெட்டை வீழ்த்துவதுதான் வெற்றிக்கு வழி என்று முடிவெடுத்தேன். நான் இதுவரை கிளப் அணிக்குத்தான் கடைசி ஓவரை வீசியுள்ளேன், ஆனால் நேற்று விக்கெட்டுகளை நோக்கி வீசினேன்.

கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டதால் நான் என்னை ஏதோ பெரிதாக எண்ணிவிடவில்லை அல்லது பெருமகிழ்ச்சியும் அடைந்து விடவில்லை. அந்தத் தருணத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் பிறகு நகர்ந்து செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...