ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்ற அணிகள்: இலங்கை அணி எத்தனை வெற்றி தெரியுமா?

Report Print Kabilan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடந்த ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், இந்திய அணி தனது 500வது ஒருநாள் போட்டி வெற்றியை பதிவு செய்துள்ளது.

நாக்பூரில் நேற்று நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது போட்டியில், இந்திய அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இது ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி பெற்ற 500வது வெற்றியாகும்.

இந்த மைல் கல்லை எட்டிய 2வது அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது. அவுஸ்திரேலிய அணி 558 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடம் வகிக்கிறது.

ஒருநாள் போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்ற அணிகள்
  • அவுஸ்திரேலியா 924 (போட்டிகள்) - 558 வெற்றிகள்
  • இந்தியா 963 (போட்டிகள்) - 500 வெற்றிகள்
  • பாகிஸ்தான் 907 (போட்டிகள்) - 479 வெற்றிகள்
  • மேற்கிந்திய தீவுகள் 793 (போட்டிகள்) - 390 வெற்றிகள்
  • இலங்கை 832 (போட்டிகள்) - 379 வெற்றிகள்
  • தென் ஆப்பிரிக்கா 606 (போட்டிகள்) - 374 வெற்றிகள்
  • இங்கிலாந்து 726 (போட்டிகள்) - 362 வெற்றிகள்
  • நியூசிலாந்து 758 (போட்டிகள்) - 342 வெற்றிகள்

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்