விஜய் சங்கரின் இந்த விடயம்தான் வேலை செய்தது: விராட் கோஹ்லி

Report Print Kabilan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில், தமிழக வீரர் விஜய் சங்கர் ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் பந்து வீசியதுதான் வேலை செய்ததாக விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

நாக்பூரில் நேற்று நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. தமிழக வீரர் விஜய் சங்கர் 46 ஓட்டங்கள் எடுத்ததுடன், கடைசி ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.

இந்நிலையில், இந்த வெற்றி குறித்து இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறுகையில், ‘நான் பேட்டிங் செய்ய இறங்கியபோது சூழ்நிலையும் கடினமாகவே மாறியது. தலையை தொங்கப்போட்டு கடைசி வரை ஆடுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.

எங்களது 2வது இன்னிங்சை நினைத்தால் எனக்கு முதல் இன்னிங்சை விட பெருமையாக இருக்கிறது. விஜய் சங்கர் பிரமாதமாக ஆடினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் ரன்-அவுட் ஆனார். கேதார், டோனி ஆகியோரை அடுத்தடுத்து இழந்தோம்.

AP

விஜய் சங்கரை உண்மையில் 46வது ஓவரில் கொண்டு வரலாம் என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆனால் ரோஹித் ஷர்மா, டோனி ஆகியோரிடம் ஆலோசித்தபோது இருவரும் பும்ரா, ஷமியே வீசட்டும். நமக்கு இன்னும் ஓரிரு விக்கெட்டுகள் விழுந்தால் நாம் டாப்பில் இருப்போம் என்றனர். அது தான் மிகச்சரியாக நடந்தது.

விஜய் சங்கர் ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் வீசி எளிதாக வைத்துக் கொண்டார். அதுதான் வேலை செய்தது. இது போன்ற போட்டிகள் தன்னம்பிக்கையை அதிகரிக்கின்றன. சில சமயங்களில் அசிங்கமாக ஆடுவது போல் இருக்க வேண்டும், அங்கிருந்து வெற்றி பெற வேண்டும்.

40வது ஒருநாள் சதம் நல்லுணர்வைத் தருகிறது. ஆனால், இது வெறும் நம்பர்தான். ஆனால், இந்திய அணி வெற்றி பெற்றது அதை விட முக்கியம்’ என தெரிவித்துள்ளார்.

AP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்