அவுஸ்திரேலியா அணியை கதறவிட்ட தமிழக வீரர் விஜய் சங்கர்! புகழ்ந்து தள்ளிய இலங்கையின் முன்னாள் வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தமிழக வீரர் விஜய் சங்கரை இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரசுல் அர்னால்டு பாராட்டியுள்ளார்.

இந்தியா-அவுஸ்தேலியா அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நாக்பூரில் நடைபெற்றது.

இதில் இந்திய அணி நிர்ணயித்த 250 ஓட்டங்களை அவுஸ்திரேலியா அணி விரட்டிய போது, கடைசி ஓவரில் தமிழக வீரர் விஜய் சங்கர் மிரட்ட, அவுஸ்திரேலியா அணி 49.3 ஓவரில் 242 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இப்போட்டியின் கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு அவுஸ்திரேலியா அணிக்கு 11 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அப்போது இந்திய அணியின் பந்து வீச்சை சிதறடித்துக் கொண்டிருந்த ஸ்டோனிஸ் களத்தில் நின்று கொண்டிருந்ததால், அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதே சமயம் அவுஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை இழந்திருந்ததால், இரண்டு விக்கெட்டுகளை எடுத்தால் இந்திய அணி வெற்றி பெற்றுவிடும் என்ற போது தான், தமிழக வீரர் விஜய்சங்கரை கோஹ்லி பந்து வீச அழைத்தார்.

அதன் படியே விஜய்சங்கர தன் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு ஏற்ற வகையில், அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த ஸ்டோனிசை 56 ஓட்டங்களில் எல்பிடபில்யூ ஆக்க, அடுத்து ஜாம்பாவை அசத்தலான யார்க்கர் மூலம் போல்டாக்கி இந்தியாவுக்கு வெற்றியை தேடித்தந்தார்.

இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமான விஜய் சங்கரை பலரும் பாராட்டி வரும் நிலையில், இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரசுல் அர்னால்டு, விஜய் சங்கர் அருமையாக விளையாடிவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை அவர் ஸ்ரீனிமாமவுக்கு டேக் செய்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்