உலகக்கோப்பை இந்திய அணியில் இந்த தமிழக வீரர் கண்டிப்பாக வேண்டும்! அவுஸ்திரேலியா அணியின் ஜாம்பவான்

Report Print Santhan in கிரிக்கெட்

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியில் 15 பேர் கொண்ட குழுவில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நிச்சயம் இடம் பெற வேண்டும் என்று அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மைக்ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, தற்போது அவுஸ்திரேலியா அணியுடனான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இப்போது விளையாடும் அணியே அடுத்து நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடரில் இடம் பெறும் என்று கூறப்படுவதால், இந்த தொடரில் ஒவ்வொரு வீரர்களும் தங்கள் திறமையை காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரும் ஜாம்பவானுமான மைக் ஹஸ்ஸி, உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் எந்த 15 பேர் கொண்ட வீரர்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். அதில் துவக்க வீரர்களாக ரோகித், தவான் மற்றும் ராகுல் எனவும், இவர்களுக்கு அடுத்த படியாக கோஹ்லி, அடுத்த ராயுடு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதே போன்று வீக்கெட் கீப்பர்களில் டோனி மற்றும் தினேஷ் கார்த்திக் இருந்தால் போதும் எனவும், ஏனெனில் தினேஷ் கார்த்திக் பரபரப்பான போட்டிகள் நிறைய விளையாடியுள்ளார், அவரின் அனுபவம் நிச்சயம் கை கொடுக்கும் என்று கூறியுள்ளார்.

அதே போன்று சுழற்பந்து வீச்சில் சஹால், குல்தீப், ஆல்ரவுண்டராக ஜடேஜா, வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் சமி, பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோரை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்