டோனி-கேதர் ஜாதவ்வை புகழ்ந்து தள்ளிய கோஹ்லி! இந்திய அணியின் வெற்றிக்கு இது தான் காரணம் என பெருமிதம்

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் டோனி மற்றும் கீதர் ஜாதவ்வின் பேட்டிங் என்று தலைவர் கோஹ்லி கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான டி20 தொடரை இழந்த இந்திய அணி, நேற்று அந்தணியுடன் முதல் ஒருநாள் போட்டியில் மோதியது.

இப்போட்டியில் அவுஸ்திரேலியா அணி நிர்ணயித்த 236 ஓட்டங்களை இந்திய அணி 48.2 ஓவரில் 240 ஓட்டங்கள் எடுத்து அசால்ட்டாக வெற்றி பெற்றது.

இப்போட்டியில் இந்திய அணி தடுமாறிக் கொண்டிருந்த போது டோனி மற்றும் கீதர் ஜாதவ்வின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது.

டோனி அரைசதம் அடித்து 59 ஓட்டங்களுடனும், கீதர் ஜாதவ் 81 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இப்போட்டி குறித்து கோஹ்லி கூறுகையில், பந்துவீச்சில் நாங்கள் மிக சிறப்பாக செயல்பட்டோம். கேதர் ஜாதவ் மற்றும் டோனி ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர், கேதர் ஜாதவ் மற்றும் தோனி ஆகிய இருவருமே தங்களது பொறுப்பை உணர்ந்து தேவைக்கேற்ப விளையாடியதாக நினைக்கிறேன்.

இது மாதிரியான ஆடுகளத்தில் வெற்றி பெறுவது சிறந்தது. அவர்களின் துடுப்பாட்டமும் மிகவும் முக்கியம் வாய்ந்தது. பந்துவீச்சில் முகமது ஷமி மிக அற்புதமாக செயல்பட்டார்.

குறிப்பாக மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை அவர் வீழ்த்திய விதம் அற்புதமாக இருந்தது. உலகக்கோப்பை நெருங்கி வரும் வேளையில் இது மாதிரியான வெற்றி இந்திய அணிக்கு கூடுதல் உத்வேகத்தை தான் கொடுக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்