அந்த ஆட்டங்களை மறக்க விரும்புகிறேன்.. ஒரே ஓவரில் 35 ஓட்டங்கள் விளாசிய ஸ்ரேயஸ் அய்யர்!

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ஸ்ரேயஸ் அய்யர், தான் விளையாடிய அறிமுக ஆட்டங்களை மறக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

ஸ்ரேய்ஸ் அய்யர் சையத் முஸ்தாக் அலி டி20 தொடரில் இரண்டு சதங்கள் விளாசி அசத்தினார். குறிப்பாக சிக்கிம் அணிக்கு எதிரான போட்டியில் 55 பந்துகளில் 147 ஓட்டங்கள் குவித்தார். மேலும் ஒரே ஓவரில் 35 ஓட்டங்கள் அடித்து நொறுக்கினார்.

இலங்கை அணிக்கு எதிராக அறிமுகமான இவர், முதல் போட்டியில் 9 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். அதன் பின்னர் 88 மற்றும் 65 ஓட்டங்கள் எடுத்து அசத்திய ஸ்ரேயஸ், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடி 48 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார்.

அதன் பின்னர் இந்திய தேசிய அணியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. இந்தியா ‘ஏ’ அணிக்கு திரும்பி தனது ஆட்டத்தை மேம்படுத்திக் கொண்ட ஸ்ரேயஸ், சையத் முஸ்தாக் அலி டி20 கிரிக்கெட் தொடரில் இரண்டு சதங்கள் விளாசினார்.

PTI

இந்நிலையில், தனது ஆரம்ப கால ஆட்டத்தை மறக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்ரேயஸ் அய்யர் கூறுகையில், ‘அது அனைத்தும் முடிந்த கதை. அறிமுகமான காலத்தை மறந்து தனது ஆட்டத்தில் கவனம் செலுத்த விரும்புகிறேன்.

முதிர்ச்சியடையும்போது தானாகவே பொறுப்புகளை எடுத்துக் கொள்ள தொடங்கி விடுவோம். கேப்டனாக இருக்கும்போது மற்ற வீரர்கள் உங்களை பார்க்க தொடங்குவார்கள். அவர்கள் மரியாதை கொடுப்பார்கள்.

பேட்ஸ்ட்மேன் ஆக நான் அதிக அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளேன். என்னுடைய பலவீனம் மற்றும் பலத்தை ஆராய்ந்து தெரிந்து கொண்டேன். நான் விளையாடும்போது முடிந்த அளவிற்கு கற்றுக்கொள்ள முயற்சி செய்து வருகிறேன். கேப்டனாக இருக்கும்போது பல விடயங்கள் உதவி புரிகின்றன’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்