புதிய சாதனை படைத்த சுரேஷ் ரெய்னா: இதை செய்த முதல் இந்திய வீரர் இவர்தான்

Report Print Raju Raju in கிரிக்கெட்

20 ஓவர்கள் கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சுரேஷ் ரெய்னா பெற்றுள்ளார்.

சையத் முஸ்தாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் டெல்லியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ‘இ’ பிரிவில் இடம் பிடித்துள்ள உத்தரபிரதேசம் - புதுச்சேரி அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த உத்தரபிரதேச அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. பின்னர் இலக்கை நோக்கி ஆடிய புதுச்சேரி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 102 ரன்களே எடுத்தது. இதனால் உத்தரபிரதேச அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் உத்தரபிரதேச அணிக்காக விளையாடிய இந்திய சீனியர் வீரர் சுரேஷ் ரெய்னா 18 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

11 ரன்னை எட்டிய போது சுரேஷ் ரெய்னா 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் (சர்வதேச, உள்ளூர் போட்டிகள் எல்லாம் சேர்த்து) 8 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

300-வது 20 ஓவர் போட்டியில் ஆடிய சுரேஷ் ரெய்னா 8,001 ரன்கள் குவித்துள்ளார். உலக அளவில் 20 ஓவர் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சுரேஷ் ரெய்னா 6-வது இடத்தில் உள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்