அவுஸ்திரேலியா அணிக்கெதிரான பரபரப்பான முதல் டி20 போட்டி! ரோஹித்தை அசிங்கப்படுத்திய கோஹ்லி- பும்ரா

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான முதல் டி20 போட்டியின் பரபரப்பான நேரத்தில் கோஹ்லி மற்றும் பும்ரா துணைக் கேப்டன் ரோகித் சர்மாவின் பேச்சை கேட்காமல் அசிங்கப்படுத்திய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அவுஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 போட்டி மற்றும் ஒருநாள் தொடருக்கான போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியின் கடைசி ஓவரில் அவுஸ்திரேலியா அணி த்ரில் வெற்றி பெற்றது.

இப்போட்டியின் போது அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 2 ஓவரில் 16 ஓட்டங்கள் தேவை என்ற போது, 19-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வீசினார்.

https://sports.ndtv.com/india-vs-australia-2018-19/virat-kohli-jasprit-bumrah-ignore-rohit-sharma-during-1st-t20i-against-australia-watch-1998824

அப்போது பும்ரா, கேப்டன் கோஹ்லி மற்றும் துணைக் கேப்டன் ரோகித் சர்மா ஆகிய மூவரும் ஆலோசனை நடத்தினர்.

கோஹ்லி, பும்ரா ஆகிய இருவர் மட்டும் பேசிக்கொண்டனர். ரோகித் சர்மா ஏதோ சொல்ல முயற்சிக்க, அதை இருவரும் காதிலேயே வாங்கவில்லை.

இதனால் அதிருப்தி அடைந்த ரோகித் சர்மா சிறிது நேரம் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்