ஆஹா என்ன ஒரு மனிதர்.. ரன் வேட்டை நிகழ்த்திய தமிழ் நடிகரை புகழ்ந்து தள்ளிய அஸ்வின்!

Report Print Kabilan in கிரிக்கெட்

தமிழ் நடிகர் விக்ராந்த் நேற்று நடந்த போட்டி ஒன்றில், 92 பந்துகளில் 107 ஓட்டங்கள் குவித்ததை சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வியந்து பாராட்டியுள்ளார்.

கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வமுடைய தமிழ் நடிகர்களில் விக்ராந்தும் ஒருவர். CCL எனும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கில் சென்னை ரைனோஸ் அணிக்காக விளையாடி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் விக்ராந்த்.

இந்நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் அசோஸியேஷன் நடத்தும் டிவிஷன் தொடரில் விக்னேஷ்வரா கிரிக்கெட் கிளப்பிற்காக விக்ராந்த் விளையாடி வருகிறார்.

நேற்று நடந்த போட்டியில் விக்ராந்த் அதிரடியாக விளையாடி 92 பந்துகளில் 107 ஓட்டங்கள் குவித்து வியக்க வைத்தார். விக்ராந்தின் சதத்தால் விக்னேஷ்வரா அணி வெற்றி பெற்றது. இவரது அபார ஆட்டத்தை பலரும் ட்விட்டரில் பாராட்டி வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘என்ன ஒரு மனிதர், எங்கள் அணிக்கு கைதட்டுவதற்கான நேரம்’ என தெரிவித்துள்ளார்.

விக்ராந்த் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே, தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers