ரன்-அவுட் ஆன கோபத்தில் நாற்காலியை அடித்து நொறுக்கிய ஆரோன் பிஞ்ச்!

Report Print Kabilan in கிரிக்கெட்

பிக் பாஷ் லீக் டி20 தொடரில் எதிர்பாராத ரன்-அவுட்டால் கோபப்பட்ட ஆரோன் பிஞ்ச் நாற்காலியை அடித்து நொறுக்கினார்.

நேற்றையை தினம், மெல்போர்னில் நடைபெற்ற பிக் பாஷ் லீக் டி20 தொடரின் இறுதிப்போட்டியில் மெல்போர்ன் ரெனேகட்ஸ்-மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின.

மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிக்கு தலைவராக ஆரோன் பிஞ்ச் செயல்பட்டார். அவரது அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது. தொடக்க வீரர்களாக பிஞ்ச் மற்றும் ஹரிஸ் களமிறங்கினர்.

ஹரிஸ் 12 ஓட்டங்களில் அவுட் ஆக, பின்னர் வந்த சாம் ஹார்பர் 6 ஓட்டங்களில் வெளியேறினார். அதன் பின்னர் பிஞ்ச் உடன் கேமரூன் ஒயிட் கைகோர்த்தார். அணியின் ஸ்கோர் 47 ஆக இருந்தபோது, கேமரூன் ஒயிட் அடித்த பந்து ஜாக்சன் பர்டின் காலில் பட்டு ஸ்டம்பை தாக்கியது.

அப்போது எதிர்முனையில் இருந்த ஆரோன் பிஞ்ச் க்ரீஸுக்கு வெளியில் நின்றிருந்தார். இதனால் அவர் துரதிருஷ்டவசமாக ரன்-அவுட் ஆனார்.

இதனால் மிகுந்த விரக்தியடைந்த ஆரோன் பிஞ்ச், வீரர்களின் அறைக்கு செல்லும் வழியில் இருந்த நாற்காலியை தனது பேட்டால் ஓங்கியடித்தார். அப்போதும் கோபம் அடங்காத அவர் மீண்டும் பேட்டால் ஒருமுறை அடித்து விட்டு சென்றார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers