ஆபாச வார்த்தைகள்.. எல்லைக்கோட்டை அடித்து விட்டுச் சென்ற வீரர்! ஐசிசி எடுத்த அதிரடி நடவடிக்கை

Report Print Kabilan in கிரிக்கெட்

ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது விதிகளை மீறி களத்தில் மோசமாக நடந்துகொண்ட நியூசிலாந்து மற்றும் வங்கதேச வீரர்களுக்கு ஐ.சி.சி அபராதம் விதித்துள்ளது.

நியூசிலாந்து-வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் கிறைஸ்ட்சர்ச் நகரில் நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முன்னதாக, போட்டியின்போது நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் பந்துவீசும்போது ஆபாசமான வார்த்தைகளை பேசியது நிரூபிக்கப்பட்டுள்ளது.

REUTERS/Action Images

மேலும் வங்கதேச வீரர் மஹ்மத்துல்லா ஆட்டமிழந்து திரும்பியபோது, எல்லைக் கோட்டை தனது பேட்-ஆல் அடித்து விட்டுச் சென்றார்.

Mike Egerton/Getty Images

இதனைத் தொடர்ந்து, இரு வீரர்களும் விதிகளை மீறி களத்தில் நடந்தகொண்டதாக போட்டி நடுவரிடம் புகார் செய்யப்பட்டது. இந்நிலையில் டிரண்ட் போல்ட்டிற்கு போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவிதமும், மஹ்மதுல்லாவிற்கு 10 சதவிதமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரு வீரர்களுக்கும் தலா டிமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக முதன் முறையாக இதுபோன்ற தவறுகளில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு டிமெரிட் புள்ளி வழங்கப்படும்.

தொடர்ந்து இது போன்ற தவறுகளைச் செய்யும்போது வழங்கப்படும் புள்ளிகள், அவர்களது ஒழுங்கீனக் கணக்கில் சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்