அறிமுக போட்டியிலேயே 5 விக்கெட்கள் வீழ்த்தி வியக்கவைத்த இலங்கை வீரர்! யார் அவர்?

Report Print Raju Raju in கிரிக்கெட்

இலங்கை - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை பந்துவீச்சாளர் லசித் அம்புல்தெனிய 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

அம்புல்தெனியாவுக்கு இது தான் முதல் சர்வதேச போட்டி என்ற நிலையில் தென் ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டும், இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்களும் எடுத்தார்.

22 வயதான அம்புல்தெனிய இதுவரை 22 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இதில் மொத்தமாக 131 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.

ஒரு இன்னிங்சில் அவரது சிறந்த பந்துவீச்சு 59 ரன்களை விட்டுகொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தியது ஆகும்.

ஒரு மேட்ச்சில் அம்புல்தெனியவின் சிறந்த பந்துவீச்சு 123 ரன்களை விட்டு கொடுத்து 10 விக்கெட்களை வீழ்த்தியது ஆகும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers