டோனி பேட்டின் ரகசியம் என்ன? முதல் முறைய உண்மையை உடைத்த பேட் தயாரிக்கும் நிறுவனம்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான டோனி, ஒவ்வொரு நாட்டிற்கு ஒவ்வொரு வகையான பேட்களை பயன்படுத்துகிறார் என்று, அவருக்கு பேட் தயாரிக்கும் நிறுவனம் கூறியுள்ளது.

இந்திய அணி சமீபத்தில் நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியது.

இந்த தொடரில் பார்ம் இன்றி தவித்து வந்த டோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தன்னைப் பற்றி விமர்சித்தவர்களுக்கு பேட் மூலம் பதிலடி கொடுத்தார்.

பேட்டிங்கில் மட்டுமின்றி கீப்பிங்கிலும் டோனி மின்னல் வேகத்தில் செயல்பட்டு வருகிறார். நியூசிலாந்து தொடரில் அடுத்தடுத்த போட்டியில் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்து அசத்தினார்.

இந்நிலையில் டோனியின் பேட் எடை எவ்வளவு இருக்கும், அதன் ரகசியம் என்ன என்பது குறித்து அவருக்கு பிரத்யேகமாக பேட் தயாரிக்கும் BAS நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதில், டோனி ஒவ்வொரு நாட்டிற்கும் செல்லும் போது ஒவ்வொரு வகையான பேட்களை பயன்படுத்துவார். வெளிநாடுகளுக்குச் சென்றால் அவர் பயன்படுத்தும் மட்டையின் எடை 1150 கிராம் மட்டுமே இருக்கும்.

இந்தியாவில் ஆடினால் பந்து மெதுவாகத்தான் வரும். இதனால் 1250 கிராம் மட்டையை உபயோகப்படுத்துவார் .இதுவே அவரது வெற்றிக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers